Wednesday, October 9, 2013

“ எதுவுமே நிரந்தரமில்லைதான். அதுபோல் இந்தப் பிரிவும் நிரந்தரமில்லாததாக மாறிவிடக் கூடாதா ” தோழர் பா.கலைவாணன் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உருக்கமான உரை



“ எதுவுமே நிரந்தரமில்லைதான். அதுபோல் இந்தப் பிரிவும் நிரந்தரமில்லாததாக மாறிவிடக் கூடாதா ”  சிதம்பரம் த.இ.மு தோழர் பா.கலைவாணன் நினைவேந்தல் நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் உருக்கமான உரை


தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர துணைத்தலைவர் தோழர் பா.கலைவாணன் 24.09.2013 மாலை காலமானார். அவரது படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 09.10.2013 புதன் காலை 11 மணி அளவில் சிதம்பரம் சிவஜோதி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் மறைந்த தோழர் கலைவாணன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார். அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி வணக்கம் செலுத்தினர். பின்னர் தோழர் கலைவாணன் படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.
]
தோழர் கலைவாணன் அவர்களது தோழமைப் பண்பையும், போர்க்குணத்தையும் எடுத்துக்காட்டி தோழர் கி.வெங்கட்ராமன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை தனது நினைவேந்தல் உரையில் தோழர் கலைவாணன் மறைவு கட்சிக்கும், தமிழக இளைஞர் முன்னணி அமைப்புக்கும் ஒரு முக்கியமான நேரத்தில் ஏற்பட்ட பேரிழப்பு எனக் குறிப்பிட்டார்.

நிறைவாக தோழர் பெ.மணியரசன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்:
“தோழர் கலைவாணன் படத்தைத் திறந்து வைப்பது மிகப் பெரிய மனத்துன்பமாக இருக்கிறது. கடந்த 2012 டிசம்பர் 3 ஆம் நாள் சிதம்பரத்தில் நடைபெற்ற அவரது திருமணத்தில் என் கையாலேயே மாலை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தேன். அதே கையால் தோழர் கலைவாணன் படத்துக்கு இன்று மாலை சூட்ட வேண்டிய கொடும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இளம் வயதில் இறந்து போவது தமிழ் நாட்டில் இப்போது அடிக்கடி நிகழ்கிறது. அதை அறிவிக்கும் சுவரொட்டிகளை பார்க்கும் போது மனதிற்கு துன்பமாக இருக்கிறது. ஆயினும் அது நமக்கு நேரடியாக தொடர்பில்லாதவர்கள் மறைவு என்பதால் சில நிமிடங்களில் நம் எண்ணத்திலிருந்து மறைந்து விடுகிறது. அதே இழப்பு நம் குடும்பத்தில் நடக்கும்போது , நம் இயக்கத்தில் நடக்கும் போது அது பெரும் துயரமாக அழுத்துகிறது.

திருமணமாகி ஓராண்டுக்குள்ளேயே கணவனை இழந்த ஜானகிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்வதைப் போல “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்” என்பதே உண்மை நிலை. இதே போல் இளம் வயதில் இறந்து போன ஒரு இளைஞனுக்கு அவனது நண்பர்கள் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை ஒரு ஊரில் பார்த்தேன். அதில் கண்ட வாசகங்கள் நெஞ்சை உலுக்கின. “இந்த உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை என்கிறார்களே! அப்படியானால் உன் பிரிவும் நிரந்தரமானது இல்லை தானே!” என்றது அந்த வாசகம். அதே விருப்பம் தான் கலைவாணன் மறைவிலும் நமக்கு ஏற்படுகிறது. ஆனால், மாண்டவர் மீண்டுவருவது இயற்கையில் நடப்பதில்லை.

கலைவாணனின் குழந்தை அமுதன், கலைவாணனைப் போலவே இருக்கிறான். கலைவாணன் அமுதன் வடிவில் நம்மோடு இருக்கிறார் என்று நாம் ஆறுதல் அடைய வேண்டியது தான்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் கலைவாணன் ஆற்றிய பணிகளை இங்கே தோழர் கி.வெ குறிப்பிட்டார். இருக்கும் போது மட்டுமல்ல இறந்த பிறகும் அவர் தமிழ்ச் சமூகத்திற்கு பயன்பட்டிருக்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல் செத்தப் பிறகும் கண் தானம் கொடுத்திருக்கிறார்.

இனியும் இந்த இறப்பைப் பற்றியே நினைத்துக் கொண்டிராமல், கலைவாணனின் குடும்பத்தாரும், கட்சி அமைப்புத் தோழர்களும், கலைவாணனின் நண்பர்களும் இன்றோடு துக்கத்தை ஆற்றிக் கொண்டு அவரவர் கடமைகளை செய்ய வேண்டும். கலைவாணன் இல்லாத நிலையிலும் அமுதனை சிறப்பாக வளர்த்துப் படிக்கவைத்து முன் நிறுத்துவதை ஒரு சவாலாக ஏற்று சானகி நிறைவேற்ற வேண்டும். அதற்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து நாங்கள் உறுதுணையாக இருப்போம்”
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.

தோழர் பா.கலைவாணனின் மூத்த அண்ணன் திரு பா. அசோக்குமார் தங்களது துக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.
படத்திறப்பு நிகழ்ச்சியை கட்சியின் நகர செயலாளர், தோழர் கு.சிவப்பிரகாசம் ஒருங்கிணைத்தார்.

த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் குழ.பால்ராசு, பழ இராசேந்திரன், க.முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர், பெண்ணாடம் த.இ.மு தோழர்கள், த.இமு துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக உழவர் முன்னணி திரு சி.ஆறுமுகம், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா, சிறுதொழில் முனைவோர், காய்கறி வணிகர்கள், தையல் கலைஞர்கள் என பல தரப்பினரும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

Saturday, October 5, 2013

தஞ்சையில் வெளியார் எதிர்ப்புப் பரப்புரை


தஞ்சையில் வெளியார் எதிர்ப்புப் பரப்புரை


தஞ்சையில் 05.10.2013 அன்று, தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் நுழைந்து கொண்டிருக்கும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாதென வலியுறுத்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

த.தே.பொ.க. தஞ்சை நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில், மேரிஸ் முனையிலிருந்து காலை 11 மணியளவில், தொடங்கியப் பரப்புரை முக்கிய வீதிகளின் வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் துண்டறிக்கைகள் வழங்கியபடி நடைபெற்ற பரப்புரையின் போது, கோரிக்கை வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பல வணிகர்களும், தானி ஓட்டுநர்களும் தானே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களிலும், தானிகளிலும் ஒட்டிச் சென்றனர்.

பரப்புரையில், த.தே.பொ.க. நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், த.இ.மு. நகரப் பொருளாளர் தோழர் லெ.இராமசாமி, தோழர்கள் பாலகிருட்டிணன், சூர்யா உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர். 




Wednesday, September 18, 2013

வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்ட - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது! சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை


“ தமிழ் நாடு என்ன திறந்த வீடா? வெளியாரின் வேட்டை காடா? “
வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்ட - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது! சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை 


வெளிமாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை - குடும்ப அட்டை கொடுக்கக் கூடாது, தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர் நிரந்தர சொத்து வாங்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பின் தமிழக துணைப் பொதுச் செயலாளர் தோழர், ஆ.குபேரன் தலைமையில் 04.09.2013 அன்று சிதம்பரம் காசுக்கடைத்தெரு தொடங்கி, லால்கான் தெரு, மேலவீதி, தெற்கு வீதி சபாநாயகர் தெரு, அண்ணாமலை நகர், கீழவீதி, வேணுகோபால் தெரு, செ.பி. கோயில் தெரு, ஓமகுளம் , மந்தகரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்பரப்புரையில். வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என மக்களை சந்தித்து கோரிக்கையை விளக்கி துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

தில்லை நடராசர் ஆலயத்தை சுற்றியுள்ள முதன்மை வீதிகளில் மட்டும் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மொத்த விற்பனை கிடங்குகள், காலி மனைகள் என மார்வாரி மலையாளி குசராத்தி சேட்டுகளின் பிடியில் உள்ளன.

இந்நிலையில் வெளியாரை வெளியேற்றக் கோரி நகரின் முக்கியப் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த சுவர் எழுத்துகள் , வெளியார் ஆதிக்கம் குறித்து நடத்தப்பட்ட பரபரப்பையும் பொதுமக்களிட்த்தில் வரவேற்பையும் ஆதரவை பெற்றது. சிதம்பரத்தில் வெளியாரின் ஆதிக்கம் குறித்து நகை வணிகர்கள், தானிய மொத்த விற்பனையாளர்கள் தொடங்கி சிறு வணிகம் நடத்துவோர் எனப் பலதரப்பட்டவர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கோரிக்கை வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் - வில்லைகள் கடைகள், தானிகள், தனியார் பேருந்துகளில் ஒட்டப்பட்டன.

பரப்புரையின் நிறைவாக 18.09.2013 காலை 11 மணிக்கு வெளிமாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது, தமிழ் நாட்டில் நிரந்தர சொத்து வாங்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

பரப்புரையில், த.இ.மு துணைப் பொதுச் செயலாளர் ஆ.குபேரன், த.இ.மு முன்னாள் துணைத் தலைவர் பா.பிரபாகரன், சிதம்பரம் நகரத் தலைவர் ந.இராசேந்திரன், து.செயலாளர் கி.சதீசுகுமார், நகரப் பொருளாளர் சு.சுகன்ராஜ், ப.க.கார்த்திக், இரா.எல்லாளன், செ.மணிமாறன், திருமாறன், அ.மணிகண்டன் தமிழக மாணவர் முன்னணி சிதம்பர நகர அமைப்பாளர் வே.சுப்ரமணியசிவா உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Monday, September 16, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது. குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை



வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது. 
குடந்தையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை 

அண்மைக்காலமாக தமிழ் நாட்டில் பிற மாநில மக்கள் குடியேற்றம் பெருமளவில் அதிகரித்துவருகிறது.

மார்வாடிகள் மலையாளிகள், பீகாரிகள், என அயல் இனத்தாரின் ஆயிரம் ஆயிரமாய் தமிழ் நாட்டில் வந்து குவிகிறனர்.

அண்மையில் இந்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011ன் படி தமிழ் நாட்டில் குழந்தைப் பிறப்பின் மூலம் புதிதாக உயரும் தமிழ் மக்களின் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஈடாக – கிட்டதட்ட அதே அளவுக்கு, அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது.

அயல் மாநிலத்தவரின் இந்த மிகை நுழைவு இதே அளவு நீடித்தால் அடுத்த 15 ஆண்டுகளில் தமிழர்களின் தாய்மொழி, தாயகம், பண்பாடு, சமூகநீதி, தனித்தன்மை அனைத்தும் சீர்குலையும். தமிழ் மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக மாற்றப்படுவர்.

குடந்தை - சாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கையும் ஆதிக்கமும் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், விளைநிலங்கள் வெளியார் கைக்கு மாறிவருகிறது.

இன் நிலையில் குடந்தை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ் நாட்டில் வாக்களர் அட்டை குடும்ப அட்டை கொடுக்க்க் கூடாது என கோரி குடந்தையில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

16-09-2013 அன்று மாலை 6:00 மணிக்கு த,இ.மு குடந்தை நகரச் செயலாளர் தோழர் ச.செந்தமிழன் தலைமையில் குடந்தை கும்பேசுவ்ரர் தெற்குவீதி தொடங்கி பேருந்து நிலையம் வரை பரப்புரை நடைபெற்றது

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் துண்டறிக்கை வழங்கி பரப்புரை நடைபெற்றது, தோழர்கள் கொண்டு சென்ற வெளியார் எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஒட்டு வில்லைகளை தங்கள் வீடுகளில், வணிக நிறுவன்ங்களில் ஆர்வத்துடன் ஒட்டி ஆதரவளித்தனர். குடந்தை பகுதியில் வெளியார் ஆதிக்கம் குறித்த தாக்கங்களை மக்கள் தோழர்களுடன் மக்கள் பகிர்ந்து கொண்டனர்.

பரப்புரையில் த.இ.மு த.தே.பொ.க நகரச் செயலாளர் க.விடுதலைச்சுடர், த.இ.மு சாமிமலை கிளைச்செயலாளர் ம.சரவணன் த.தே.பொ.க சாமிமலை கிளைச் செயலாளர் ம.முரளி, ம.பிரபு, க.தீந்தமிழன், இரா.அருள், தேவராயன்பேட்டை த.இ.மு கிளைச் செயலாளர் பிரபாகரன் , கு.வெங்கடேசன் உட்பட திரளான தோழர்கள் கலந்துகொண்டு பரப்புரை செய்தனார்.

Sunday, September 8, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது. சென்னையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை


வெளிமாநிலத்தவருக்கு  வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
சென்னையில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை




சென்னை கிழக்குத் தாம்பரம் பகுதியில், 30.08.2013 அன்று மாலை நடைபெற்ற ..மு. துண்டறிக்கைப் பரப்புரை, கிழக்குத் தாம்பரம் முதன்மைச் சாலை, பரத்வாஜ் தெரு, வால்மிகி தெரு, திருவள்ளுவர் தெரு, காலமேகம் தெரு வழியாக கிழக்குத் தாம்பரம் முதன்மைச் சாலை - இளங்கோவன் தெரு அருகில் நிறைவடைந்தது.

31.08.2013 அன்று பல்லாவரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பரப்புரை, கேட்டல் சான்டி சாலை வழியாக பல்லாவரம் சந்தைப் பகுதி வணிக நிறுவனங் களிலும், ரங்கநாத முதலித் தெரு வழியாக தொடர் வண்டிநிலையம் சந்தை பகுதி வரையிலும் நடை பெற்றது.

08.09.2013 அன்று படப்பை பேருந்து நிலையத்தில் தொடங்கிய பரப்புரை, பேருந்து நிலையச் சாலை, படப்பை முதன்மைச் சாலை, வழியாக கலைஞர் நகர் வரை தொடர்ந்தது. அதன் பின், வணிக நிறுவனங்கள் நிறைந்த படப்பை சந்தைப் பகுதியில் பரப்புரை நடை பெற்றது.

இப்பரப்புரை நிகழ்வுகளில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் . அருண பாரதி, தாம்பரம் ..மு. தலைவர் தோழர் இளங்கு மரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை ..மு. செயலாளர் தோழர் கோவேந்தன், .தே.பொ.. சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தோழர்கள் சரவணன், முத்துக்குமார், குமரேசன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.


பரப்புரையின் போது, தோழர்கள் துண்டறிக்கையை பொது மக்களிடம் வழங்கியதோடு அதிலுள்ள விவரங் கள் குறித்து விளக்கிப் பேசினர். பல தமிழ் வணிகர்கள், வெளியாரால் தாம் பாதிக்கப்பட்டதை விவரித்து, பரப்புரைக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். கோரிக்கையை விளக்கும் வகையில் ..மு. சார்பில் உருவாக்கப்பட்ட ஒட்டிகளை, தானி ஓட்டுநர்கள் ஆர்வத்துடன் தங்களது வாகனங்களில் வாங்கி ஒட்டிக் கொண்டனர்

Wednesday, September 4, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது. பெண்ணாடம் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை

வெளிமாநிலத்தவருக்கு  வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
பெண்ணாடம்  தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை

பெண்ணாடம் பகுதியில், 23.08.2013 அன்று பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, முதன்மைச் சாலை வழியாக காவல் நிலையம் வரையிலும், 24.08.2013 பெலாந்துறை, கணபதிக்குறிச்சி பகுதிகளிலும், 25.08.2013 அன்று கருவேப்பங் குறிஞ்சியிலும், 31.08.2013 அன்று விருதாச்சலத்திலும், 4.09. 2013 அன்று விருதாச்சலம் அரசுக் கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலும் பரப் புரை இயக்கம் நடைபெற்றது.


பரப்புரை இயக்கத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையேற்க, .தே.பொ.. கிளைச் செயலாளர் தோழர் கனக சபை உள்ளிட்ட திரளான தோழர் கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .முருகன் தோழர்களை வழிநடத்தினார்

Wednesday, August 28, 2013

டாஸ்மாக் கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம் தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் விடுதலை!


டாஸ்மாக் கடையை இழுத்துப் பூட்டும் போராட்டம்
தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் விடுதலை!



தமிழக இளைஞர்களை போதையில் ஆழ்த்தி, ஆளுமையை சீரழித்து தமிழினத்தின் எதிர்காலத்தையே சீரழித்து வரும் அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடக் கோரி தமிழக இளைஞர் முன்னணி சார்பில் 2013 சனவரி 4 அன்று  தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடைபெற்றது.

சென்னை, தஞ்சை, ஓசூர், கிள்ளுக்கோட்டை, குடந்தை, கிருட்டிணகிரி, செங்கிப்பட்டி, சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்டப் பகுதிகளில் கடுமையான காவல்துறை கெடுபிடிகளுக்கிடையே நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான த.இ.மு. தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், பெண்ணாடம் (முருகன்குடி) ஆகிய பகுதிகளில் போராடியத் தோழர்கள் மீது காவல்துறை கண்மண் தெரியாத தடியடி நடத்தி கைது செய்தனர்.

சிதம்பரம் கஞ்சித்தொட்டி பகுதியில் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர்  ஆ.குபேரன் தலைமையில் டாஸ்மாக் சாராயக்கடையை இழுத்து பூட்டும் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 19 பேரை காவல்துறை, தடியடி நடத்திக் கைது செய்தது.

தோழர்கள் மீது 143, 188, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகள் பதிந்த காவல்துறையினர்,  04.01.2013 அன்று கடலூர் நடுவண் சிறையில் அடைத்தனர். 09.01.2013 அன்று நிபந்தனைப் பிணையில் விடுதலையானத் தோழர்கள் 15 நாட்கள் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டனர்.

இது குறித்த வழக்கு சிதம்பரம் குற்றவியல் நடுவர் எண் 2ஆம்  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. த.இ.மு சார்பில் வழக்கினை வழக்கறிஞர் திரு விஜய்ரஞ்சித் நடத்தினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, இன்று (26.08.2013) தீர்ப்பளித்த நீதிபதி, தோழர்கள் ஆ.குபேரன், வே.சுப்ரமணியசிவா, கி.சதீசுகுமார், ப.கா.கார்த்திக், சு.சுகன்ராஜ், செ.மணிமாறன், ஞா.விக்னேசுவரன், ரா.கலைக்கோவன், பா.கலைவாணன்,  ந.ராசேந்திரன், இரா.எல்லாளன்(எ)ராசேசுகுமார், ரங்கநாதன், சி.அருண்பிரகாஷ், சோ.கார்த்திகேயன், மு.முருகவேள், ஆ.யவனராணி, இரா,பவித்ரா, வே.சிவஞானஜோதி, இரா,ஐஸ்வர்யா ஆகிய அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்! டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடும் வரை போராட்டங்களை முன்னெடுப்போம்!





Tuesday, June 11, 2013

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு வீரவணக்கம்!


பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு வீரவணக்கம்! 


தமிழ் இன, மொழி உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது 18ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (11.06.2013), சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க்களத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், தமிழக இளைஞர் முன்னணி சார்பில் தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் தலைமையிலான தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்! 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவை நெஞ்சிலேந்துவோம்! தமிழ் இன, மொழி உரிமைகளுக்குப் போராட உறுதியேற்போம்! 






Wednesday, May 8, 2013

குட்கா, பான்பராக், பான்மசாலா போதை பாக்குகளுக்கு தமிழக அரசு விதித்த தடையை வரவேற்கிறோம்!



குட்கா, பான்பராக், பான்மசாலா போதை பாக்குகளுக்கு
தமிழக அரசு விதித்த தடையை வரவேற்கிறோம்!
 

தமிழக இளைஞர் முன்னணி அறிக்கை

பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்டவைகளை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணி தொடர்ந்து போராடி வந்தது. இப்போதைப் பாக்குகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்று நோய், வயிற்றுப் புண், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகின்றன. பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

பொது மக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை தமிழக இளைஞர் முன்னணி நடத்தியது. விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி வணிகர்கள் மத்தியில் பரப்புரை இயக்கமும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இவ்வகைப் பாக்குகளை தடை செய்யாமல் விலையை சற்று உயர்த்திய நேரத்தில், அதைத் தடை செய்ய வலியுறுத்தி சென்னை கோட்டை முன் தமிழக இளைஞர் முன்னணி மறியல் போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இப்போதைப் பாக்குகளை உற்பத்தி செய்யும், வடநாட்டைச் சேர்ந்த கோத்தாரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்பட்டு தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் கைதாகினர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வகை போதைப் பாக்குகள் தடை செய்யப்பட்டன. இதனை எதிர்த்து குட்கா தயாரிக்கும் வடநாட்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்திய அரசு, புகையிலை சார்ந்த பொருட்களை உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் அறிவித்தது. இதன் மூலம் பான்பராக், மாணிக் சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பாக்குகளின் விற்பனையை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இதனைப் பயன்படுத்தி, மத்தியப் பிரதேசம், கேரளா, பீகார் மாநிலங்கள் குட்கா வகை பாக்குகளின் விற்பனைக்குத் தடை விதித்தன. இதனைச்சுட்டிக் காட்டி, கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பரில்  குடந்தையில் நடைபெற்ற தமிழக இளைஞர் முன்னணி ஆறாவது தமிழக மாநாட்டில், இளைஞர்களின் ஆளுமைத் திறனை சீரழித்து அவர்களை போதை அடிமைகளாக வைத்திருக்கும், பான் பராக், மாணிக்சந்த், ஹான்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை போதைப் பொருட்களையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டுமெனக் கோரினோம்.

இந்நிலையில், பான்பராக், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும், சேமிக்கவும் தமிழக அரசு தடை விதிக்கிறது என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். தமிழக அரசின், இத்தடையை தமிழக இளைஞர் முன்னணி வரவேற்கிறது!

இதே போன்று, இளைய தலைமுறையினரை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மதுவையும் தமிழக அரசு தடை செய்து, டாஸ்மாக் மதுபானக்கடைகளை இழுத்து மூடவேண்டுமென்றும் கோருகிறோம்! 

இங்ஙனம்,
கோ.மாரிமுத்து, தலைவர், தமிழக இளைஞர் முன்னணி.
க.அருணபாரதி, பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி. 

இடம்: சென்னை -17. 
நாள்: 08.05.2013

Tuesday, March 19, 2013

தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது



தமிழகம் எங்கும் : அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது

 

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது. 
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். 
ஓசூர்
Hosur2

ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சை


தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி – தமிழக இளைஞர் முன்னணி சார்பில், அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் செனீவா அறிக்கையைக் கண்டித்தும் இவ்விரு அறிக்கைகளும் பாடையில் கொண்டு செல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு, த.இ.மு செயலாளர் தோழர் தட்சிணாமூர்த்தி, புலவர் இரத்தினவேலவர், ம.தி.மு.க. ஒன்றீயச் செயலாளர் இரா.நந்தகுமார், விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்புச்செயலாளர் தோழர் அருண்மாசிலாமாணி, புதியத் தமிழகம் ஒன்றியச் செயலாளர் இராசமோகன், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் அர்புதராசு உள்ளிட்ட திரளான முன்னணியாளர்களும், பொது மக்களும் இதில் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் தலைமையிலான தோழர்கள், இந்திய அரசின் அறிக்கை மற்றும் அமெரிக்கத் தீர்மானத்தை இராசபக்சே உருவபொம்மையுடன் கட்டி பாடையில் கொண்டு வந்து, எழுச்சி முழக்கங்களுக்கிடையேத் தீயிட்டுக் கொளுத்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேரணியை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.
சிதம்பரம்
Chid1

சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
அப்போது இந்திய – சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பெண்ணாடம்
பெண்ணாடம் பேருந்துநிலையம் அருகில் மாலை 5 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு த.இ.மு.நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரகாசு தலைமையேற்றார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சித் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன், ஆசிரியர் மாசிலாமணி, தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் இராமகிருட்டிணன், மனித நேயப் பேரவை பஞ்சநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் அமெரிக்கத் தீர்மானம் தீயீட்டுக் கொளுத்தப் பட்டது, இதில் திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

திருச்சி

திருச்சி திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழக இளைஞர் முன்னணி சார்பில் உண்ணாப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. உண்ணாப்போராட்டத்தை தமிழக இளைஞர் முன்னனி திருச்சி அமைப்பாளர் தோழர் த.தியாகராசன் தொடக்கி வைத்தார்.
தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பாவலர் முவ.பரணர், ம.தி.மு.க. அரசியல் ஆலோசகர் புலவர் முருகேசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்.
தமிழ் கலை இலக்கியப் பேரவை செயலாளர் தோழர் இராசாரகுநாதன், தலைவர் இரெ.சு.மணி, மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் தோழர் பானுமதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன், தோழர் இனியன், தூவாக்குடி த.தே.பொ.க. பொறுப்பாளர் தோழர் வி.க.லெட்சுமணன்,ம.தி.மு.க. திருச்சி மாவட்டச் செயலாளர் மலர்மன்னன், தேசிய முற்போக்குத் திராவிட கழகம் சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திரளான தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

அமெரிக்கத் தீர்மானமும் இந்தியாவின் அறிக்கையும் பாடையில் கட்டி எரிக்கப்பட்டது



Chen2
தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைத்தும், ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாப்பதாகவும் உள்ள வகையில், அமெரிக்கா முன்வைத்துள்ள ஐ.நா. தீர்மானத்தையும், இலங்கை அரசைப் பாராட்டி இந்திய அரசு ஜெனீவாவில் அளித்துள்ள அறிக்கையும், இன்று(19.03.2013) தமிழக இளைஞர் முன்னணி சார்பில், பாடையில் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
சென்னை
Chen1
சென்னை நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி வாயிலிருந்து, தமிழக இளைஞா முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி தலைமையில் துவங்கிய பேரணியில், அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டது.
நுங்கம்பாக்கம் சுடுகாடு வரை சென்ற பேரணியின் முடிவில், சுடுகாடு வாயிலில் அமெரிக்கத் தீர்மானமும், இந்தியாவின் அறிக்கையும் மட்டுமின்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசுக் கொடியும், சிங்களப் பேரினவாத அரசின் கொடியும் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
Chen3
நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை நகரத் தலைவர் தோழர் வினோத், தாம்பரம் தலைவர் தோழர் இளங்குமரன், செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் அகத்தாய்வன் உள்ளிட்ட த.இ.மு. நிர்வாகிகளும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், கொண்டல்சாமி உள்ளிட்டவர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
Chen4
ஓசூர்
Hosur1
ஓசூரில், இன்று காலை பேருந்து நிலையம் முன்பு 10.30 மணியளவில், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில், மோசடியான அமெரிக்கத் தீர்மானமும், இந்திய அரசின் அறிக்கையும் பாடை கட்டி தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. போராட்டத்தில், கிருட்டிணகிரி நகர அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன், தோழர் செம்பரிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். இந்நிகழ்வில், திரளான உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Hosur2

சிதம்பரம்

Chid1
சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், இன்று காலை தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், இந்திய அரசின் மோசடி அறிக்கையையும் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திரளான இளைஞர்களும் பங்கேற்றனர். தமிழக இளைஞர் முன்னணி மூத்தத் தோழர் நா.வைகறை , ஐ.நா. மன்ற அமெரிக்கத் தீர்மானம் மற்றும் அதில் இந்திய அரசு முன்வைத்த அறிக்கை ஆகியவை ஈழத்தமிழர் இனப்படுகொலையை மூடி மறைக்கும் வஞ்சக செயல் என்பதை விளக்கிப் பேசினார்.
Chid2
அப்போது இந்திய – சிங்கள அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு இடையே ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்திய -அமெரிக்க தீர்மானத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள், உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Wednesday, March 6, 2013

“ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்” - புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!




திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடிவளம்பக்குடிதிருமலைசத்திரம் உள்ளிட்டகிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தராத ஆந்திர மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்தும்அதற்கு துணை போகும் இந்திய அரசுதேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் நேற்று (05.03.2013) புதுக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .காமராசுபுதுக்குடி பேருந்துநிறுத்தத்தில் மதுக்கான் நிறுவனத்தால் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் கூட அவை கடந்த ஓராண்டிற்கும் மேலாக எரியாத நிலையில்,இருட்டில் சாலையை கடந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதையும்பலர் உடல் அங்கங்களை இழந்தது குறித்தும்ஆதாரங்களுடன் பேசினார்.

தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் .தேவதாசு பேசும் போதுஇங்கே போடப்பட்டுள்ள விளக்குகள் ஓராண்டாகஎரியவில்லையென்றால் எதற்காக மின்கம்பங்களை நட்டிருக்கீறீர்கள் எனக் கேட்டார்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சைமாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேசும் போதுமதுக்கான் நிறுவனத்திடம் கையூட்டுப் பெறுகின்ற காவல்துறை அதிகாரிகளுக்குகடுமையான எச்சரிக்கை விடுத்தார்

தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் பேசும் போதுஇவ்வார்ப்பாட்டம் ஓர் எச்சரிக்கை தான் என்றும்,அடுத்துமதுக்கான் நிறுவன அலுவலகத்தை மக்களைத் திரட்டிச் சென்று முற்றுகையிடுவோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையேஅறிவித்தார்.
.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை பேசும் போதுஇந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களையும்,மதுக்கடைகளை வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழிக்கும் தமிழக அரசையும்இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றவிபத்துகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதிமகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மீனா,மேலத்திருவிழாப்பட்டி ..முசெயலாளர் தோழர்  .கணேசன் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துபேசிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதிஇந்திய அரசு நெடுஞ்சாலைகளை தனியாரிடம்விற்றுவிட்டதையும்அத்தனியார் நிறுவனங்கள் கிராம மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தரமறுப்பதையும் எடுத்துரைத்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில்புதுக்குடிவளம்பக்குடிநரிகுறவன்பட்டிசெங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.









(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)