நோக்கங்கள்


அ). பெருமுதலாளிகள் தலைமையிலான ஆரியப் பார்ப்பனிய - இந்தித் தேசிய இன ஆதிக்க-இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட்டு இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு நிறுவுவதை முதன்மை இலக்காக் கொண்டு செயல்படும்.

ஆ). அயல் இனத்தாரின் பொருளியல் ஆதிக்கத்தாலும், அவர்களின் மக்கள் தொகை மிகை நுழைவாலும் தமிழினத் தாயகத்திற்கு எற்பட்டுள்ள ஆபத்தை எதிர்த்தும், தமிழ்ர் வாழ்வுரிமை காக்கவும் உறுதியாகப் போரடும்.

இ). வர்ண-சாதி ஒழிப்பு என்ற இலட்சியத்தை நோக்கிய பயணத்தில், தீண்டாமை ஒழிப்பு, அனைத்து நிலைகளிலும் இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காகவும், தொகுப்பு முறை இடஒதுக்கீட்டை முன் வைத்தும் போராடும் த.இ.மு, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கும், அவர்தம் பிள்ளைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு கோரிப் போராடும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ள இளையோரை ஊக்குவிக்கும்.

ஈ). வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கவும் , வேலையில்லாக் காலத்திற்கு வாழ்வூதியம் கிடைக்க வலியுறுத்தியும் போராடும்.

உ). ஆட்சி, கல்வி, வழிபாடு ஆகிய அனைத்தும் தமிழ் வழியில் நடைபெறப் போராடும். குடும்ப நிகழ்ச்சிகளை தமிழ் வழியில் நடத்த தமிழ்நாட்டு இளையோரை ஊக்குவிக்கும். அனைவருக்கும் கட்டாய, இலவச, தமிழ்வழிக் கல்வி கிடைக்கவும், தமிழ் வழியில் படித்தோர்க்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறவும் போராடும்.
  
ஊ). எல்லா முனைகளிலும், எல்லாத் தளங்களிலும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடும்.

எ) தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதத்தை மீட்டு, அறம் சார்ந்த சமத்துவப் பண்பாட்டை நிலைநிறுத்தப் பாடுபடும். 

ஏ). மது, பான்மசாலா  உள்ளிட்ட அனைத்துவகை போதைப் பழக்கங்களிலிருந்தும் இளைஞர்களை மீட்கப் பாடுபடும். இந்தப் போதைப் பொருள்களைத் தயாரித்து, விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடும். இவற்றிற்குத் தடை கோரும்.

ஐ). அனைத்துவகை  மத வெறிக்கும் எதிராகப் போராடும். பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உறுதியாகப் பரப்புரை செய்யும்.

ஒ). உழைக்கும் மக்கள் நடத்தும் உரிமைப் போராட்டங்களை ஆதரிக்கும்.

ஓ). அணு உலைக்கு எதிராகவும், இயற்கையைச் சுரண்டி, சூழல் சமநிலையை சீரழிக்கும் மையப்படுத்தப்பட்ட தொழில் வளர்ச்சி முறையை எதிர்த்தும் போராடும், இயற்கைக்கு இசைவான மாற்று வளர்ச்சி முறைக்குப் பாடுபடும்.

ஒள) தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உறுதியாக ஆதரிக்கும். உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களையும் சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும் ஆதரிக்கும்.
  
மேற்கண்ட நோக்கங்களுக்கு இசைவான பிற அமைப்புகளுடன் கைகோத்துச் செயல்படும்.

No comments:

Post a Comment